செந்தமிழ் தேன்மொழியாள்- மாலை இட்ட மங்கை பாடல்வரிகள்
படத்தின் பெயர் | மாலை இட்ட மங்கை | இசை | விஸ்வநாதன் - இராமமூர்த்தி |
---|---|---|---|
வருடம் | 1958 | வரிகள் | கவியரசு கண்ணதாசன் |
பாடியவர்கள் | டி.ஆர்.மகாலிங்கம் |
Click Here to see this in English
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டிலினே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மனம் பெறுமோ வாழ்வே ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்....
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
(காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ ஓ.. ஆ..ஆ...ஆ...)x2
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்....
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்....
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
***முற்றது***
Song pathithan vanthirukku
ReplyDelete